தமிழ்நாடு

tamil nadu

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பொன் மொழிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 5:27 PM IST

M.S.Swaminathan Quotes in tamil: இந்தியாவின் உணவு பஞ்சத்தை போக்கிய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் பொன்மொழிகளைக் காணலாம்.

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பொன் மொழிகள்
இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பொன் மொழிகள்

சென்னை:இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று (செப்.28) காலமானார். அவர் இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்க பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், இது குறித்து பல பொன் மொழிகளையும் அவர் தெரிவித்துள்ளார். அதில்,

  1. விவசாயத்தில் பூச்சி மருந்துகள் பயன்பாடு குறித்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சியே விவசாயிகள் மற்றும் விவசாயத்தைப் பாதுகாக்க மிகவும் முக்கியமானது.
  2. இந்திய விவசாயத்திற்கு பெரும் சவாலாக சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் உள்ளன. அதேபோல் நிலம், நீர், பல்லுயிர் ஆகியவற்றை பாதுகாப்பதும் சவாலாக உள்ளன. விவசாயத்தை நிலையானதாக மாற்றுவதிலும் பல சவால்கள் உள்ளன.
  3. உணவுப் பாதுகாப்பின் எதிர்காலம், விவசாய நிலங்களின் வளம் மற்றும் பாதுகாப்பில் உள்ளது என்ற புரிதல் இருந்தாலும், விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது.
  4. விவசாயம் பருவமழையைப் பொறுத்து அமைவதால், உலகில் ஆபத்தான தொழிலாக உள்ளது.
  5. விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே விவசாயத்திற்கு அறிவுப்பூர்வமாக பயனளிக்கும்.
  6. இயற்கையோடு ஒருவருக்கொருவர் ஒத்துப்போக விரும்ப வேண்டும்.
  7. தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தில் உற்பத்தியும், முன்னேற்றமும் பெற முடியும். ஆனால், பொதுக்கொள்கையால் மட்டும் விவசாயிகள் வருமானத்தை உயர்த்த முடியும்.
  8. கடந்த கால சூழல் மற்றும் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றம் நாளைய உணவுப் பாதுகாப்பில் அடங்கியுள்ளது.
  9. நாட்டிலுள்ள 700 மில்லியன் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. நம் உணவின் பாதுகாப்பு, வீட்டில் வளர்க்கும் உணவு சார்ந்த செடிகளின் அடித்தளத்தில் உள்ளது.
  10. விவசாயம் பொய்த்தால், வேறு எதுவும் சரியாக நடக்க வாய்ப்பில்லை.

ABOUT THE AUTHOR

...view details