சென்னை:ஐஐடி தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சிக் குழுவினர், மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வாயு உமிழ்வுகள் வளிமண்டலத்தில் சல்பேட் செறிவுள்ள துகள்களாக எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சியில் உண்மையான பன்முகத் தன்மையை நிரூபிக்கும் விதமாக, 8 நாடுகளைச் சேர்ந்த 17 வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து 27 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற உலகளவில் பங்கேற்றனர்.
சென்னை ஐஐடி வளிமண்டல மற்றும் காலநிலை அறிவியல் மையத்தைச் சேர்ந்த சச்சின் எஸ்.குந்தே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், தமிழ்நாட்டில் சென்னைக்கு தெற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் ஆய்வை நடத்தினர். நிலக்கரி எரிப்பால் வெளியாகும் வாயுக்களின் தாக்கம் குறித்தும், கோவிட்-19 பொது முடக்கத்தின் போது தூசிப்படல வளர்ச்சி, மேகத்தை உருவாக்கும் பண்புகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் கோவிட்-19 பொதுமுடக்க காலத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின்போது, தூசிப் படலம், மேக உருவாக்கம் ஆகியவற்றில் மனிதர்களால் ஏற்படும் உமிழ்வுகளின் தாக்கம் குறைவாக காணப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வளிமண்டல மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சச்சின் எஸ்.குந்தே கூறும்போது, தூய்மையான சூழலில் நிலக்கரி-எரிப்பு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் SO2 உமிழ்வு, மேகங்களை உருவாக்கும் தூசிப்படல துகள்கள் எவ்வாறு புதிய துகளாக மாறிப் பெருகுகிறது என்பதை ஆய்வு செய்யும் வகையில் அமைந்திருந்தது. மனிதர்களால் உருவாக்கப்படும் தூசிப்படலங்கள் காலநிலை தாக்கத்தை மதிப்பிட இந்த கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், ஒருங்கிணைந்த உமிழ்வுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது.
பிராந்திய காற்று மாசுபாட்டு விளைவுகள்:ஆய்வுக் கட்டுரையில் வழங்கப்பட்ட சோதனை முடிவுகள் மற்றும் பகுப்பாய்வுகள், மேகங்களை உருவாக்கும் திறன் கொண்ட துகள் படலங்கள் எவ்வாறு புதிய துகள்களை உருவாக்குகின்றன, நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து SO2 உமிழ்வுகளில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய்வதற்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வெப்பமண்டலத்தில் அமைந்துள்ள இந்தியாவில் ஒப்பீட்டளவில் தூய்மையான சூழலில் இவ்வாறு நிகழ்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் காலநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் அவை பெரிதும் மாசுபட்ட கடலோர இந்திய நகரங்களில், பொதுவாக நிலவும் சூழ்நிலைகளுடன் ஒப்பிடுவதற்கான அடிப்படையை ஏற்படுத்துகின்றன.குறிப்பாக பொது முடக்கக் காலத்தில் மின் உற்பத்தி நிலையம் தொடர்ந்து செயல்பட்டதால் தூசிப்படல உருவாக்கத்தின் அடிப்படை செயல்முறைகள் மற்றும் மேக உருவாக்கம் மற்றும் காலநிலையில் அதன் தாக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.
இதையும் படிங்க:தண்ணீர் திறக்கவில்லை என்றால் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுசரிப்போம் - கீழ்பவானி விவசாயிகள் போராட்டம்!
சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொழில்துறை ஆதாரங்களிலிருந்து உருவாகும் துகள் மாசுபாட்டைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தினால், திட்டமிட்ட இலக்குகளுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே, அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப காற்று மாசுபாட்டை திறம்பட கையாள்வதற்கான விரிவான மறுபரிசீலனை மற்றும் மாற்று உத்திகளை ஆய்வு செய்வதற்கான தேவை இருந்து வருகிறது.