தமிழ்நாடு

tamil nadu

மாயமான மயிலாப்பூர் மயில் சிலை: தெப்பக்குளத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்யத்திட்டம்!

By

Published : Mar 20, 2022, 3:54 PM IST

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல் போன மயில் சிலை விவகாரத்தில் தெப்பக்குளத்திற்குள் ஆய்வு செய்யும் பணியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு புதிய திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

சென்னை:கடந்த 2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கோயில் புன்னை வனநாதர் சந்நிதியில் இருந்த மயில் சிலை காணாமல் போனது. இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

கோயிலின் தெப்பக்குளத்தில் சிலை வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகத்தில், கடந்த வாரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர்கள் மூலம் சிலையைத் தேடும் பணி நடந்தது.

இந்த நிலையில் அதிநவீன தொழில்நுட்பக்கருவிகள் மூலம் குளத்தின் அடியில் சென்று தேட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.

கடல்வளம், கடல்வாழ் உயிர்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் டார்னியர் விமானம் கடலில் விழுந்தபோது தேடும் பணியில் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details