தமிழ்நாடு

tamil nadu

இயக்குநர் விடுதலை சிகப்பி மீதான வழக்கின் விசாரணையை தடை செய்தது சென்னை உயர் நீதிமன்றம்..!

By

Published : Aug 14, 2023, 3:55 PM IST

இந்து மத கடவுள்களை இழிவாக பேசியதாக சினிமா உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "மலக்குழி மரணம்" என்ற தலைப்பில் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வெளியிட்டு பேசினார். அவரின் கவிதையும், பேச்சும் இந்து மத கடவுளான இராமரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கருதப்பட்டது.

இதனையடுத்து, இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பி.விக்னேஷ்வரன் என்கிற விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளில் சென்னை அபிராமிபுரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி விடுதலை சிகப்பி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களின் நிலையை விளக்கும் வகையிலேயே கவிதை வெளியிட்டதாகவும், மத உணர்வுகளை எந்த விதத்திலும் புண்படுத்தவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீதான வழக்கில் காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், காவல்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும், மேலும் 4 வாரங்களுக்கு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நாங்குநேரி மாணவன் சின்னதுரைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி - சென்னை மருத்துவ குழு நெல்லையில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details