தமிழ்நாடு

tamil nadu

அடுத்த 15 நாட்களுக்கு குடையை கையிலயே வச்சுக்கோங்க.. வெதர்மேன் கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 2:15 PM IST

Chennai rain update: சென்னையில் இன்று முதல் 15 நாட்களுக்கு வெயில் அடித்தாலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடை மற்றும் ரெயின் கோட்டை எடுத்த செல்ல பொதுமக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார்.

CHENNAI WEATHER UPDATE
CHENNAI WEATHER UPDATE

சென்னை:வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பரவலாக பெய்து வரும் நிலையில் சென்னையில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு மழை எப்படி இருக்கும் என பல வெதர்மேன்கள் அவரவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது X தளத்தில், "தமிழகத்தில் தலைமன்னார் பகுதியில் தற்போது மேகங்கள் சுழ்ந்து உள்ளன. இவை ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி பகுதியில் கன மழைக்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையானது இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

சென்னை வானிலை: சென்னை முதல் கடலூர் வரை இருக்கும் கடலோர பகுதிகளில், அடுத்த 15 நாட்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கக் கூடும், இந்த 15 நாட்களுக்கு வெயில் அடித்தாலும் அவ்வப்போது மழையானது இருக்கும் ஆகையால் கையில் குடை மற்றும் ரெயின் கோட் கையில் எடுத்த செல்ல வேண்டும். மேலும் இன்று தமிழகத்தில் சில உள் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து சென்னை வெதர் மேன் ராஜா ராமசாமி, "தமிழகத்தில் தற்போது டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மழையானது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. மேலும் கிழக்கு நோக்கி நகரும் மேகங்களால், சென்னையில் 20 ஆம் தேதியில் இருந்து மழை படிபடியாக உயரும். மேலும் அடுத்த வரும் சில நாட்களுக்கு சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளாதாக தெரிய வருகிறது" என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அரசுப் பள்ளியின் வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details