அரசுப் பள்ளியின் வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன?

அரசுப் பள்ளியின் வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன?
Kadaladi govt school student suicide: கடலாடி அரசுப் பள்ளியில் வகுப்பறையிலேயே 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், A.புனவாசல் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தீபக் என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், இன்று(நவ.20) காலை பள்ளிக்கு சென்ற தீபக் வகுப்பறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கு சென்ற கடலாடி போலீசார் மாணவர் தீபக் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர் தீபக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் 10 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
