சென்னை: நான் முதல்வன் - தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் இந்த முயற்சிக்காக, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றோடு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஹேக்கத்தான்கள் நடத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள ஆர்வமுள்ள பொறியியல் மாணவர்கள் தங்களின் கோடிங் திறமையை வெளிப்படுத்தவும், மதிப்புமிக்க வாய்ப்புகளைப் பெறவும் இலவசமாகக் கிடைக்கும் தளமாக இருக்கும். இந்த தொடர் ஹேக்கத்தான் மூலம், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சிக்கலான அறிக்கைகளுக்கு தீர்வு காணவும், அவற்றைச் சமாளிக்க புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கவும் மாணவர்கள் முயற்சிகளை மேற்கொள்வர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனை துவக்கி வைத்தார். ஆர்வமுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் NM-TNcpl திட்டத்தில் பங்கேற்கலாம்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் சுயவேகக் கற்றல் மூலமாகவும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள், ஜென் கிளாஸ் கேரியர் புரோகிராம்ஸ் மற்றும் குறிப்பிட்ட பிரிவினர் பயன்படுத்தும் எட்டெக் (Ed Tech) சேவைகள் பற்றியும் கற்க குவி உறுதுணையாக நிற்கிறது. மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே கற்க ஏதுவாக ஆன்லைன் தளத்தை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இத்துடன் அவர்களின் திறமையை மேம்படுத்தி பணிக்குத் தயார்படுத்த சிறப்புத் தகவல் தொழில்நுட்ப படிப்புகளையும் வழங்குகிறது.
குவியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அருண் பிரகாஷ் கூறும்போது, "தொழில் நுட்பத்திற்கும், கல்விக்கும் எதையும் மாற்றும் சக்தி உண்டு என்பது எனது திடமான நம்பிக்கை. தரமான தொழில்நுட்பக் கல்வியை அனைவரும் அணுகும் இலக்குடன் எங்களது குழு இப்பயணத்தைத் தொடங்கியிருக்கின்றோம். நான் முதல்வன் கோடர்களுக்கு போட்டிச் சூழலை வழங்குவது மட்டுமின்றி, கணக்கிலடங்கா வாய்ப்புகளையும் வழங்குகிறது.