தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 12:21 PM IST

Today gold and silver rate: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் உருவான நிலையில், தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.60 ஆக அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது!
மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது!

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைப்பாடு, முதலீட்டாளர்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தினமும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும், உலக முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்வது அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலையானது, தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில், மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. செப்-2ஆம் தேதி முதல் சரிவைச் சந்திக்க ஆரம்பித்த தங்கம் விலை தொடர்ந்து சரிவை நோக்கி பயணித்தது.

இதையும் படிங்க: இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி: அதிரடி சரிவை சந்தித்த தங்கம் விலை..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!

இந்நிலையில், சனிக்கிழமை அன்று இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவான போரின் தாக்கத்தால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெயில் முதலீடுகள் அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் தற்போது அதிகரித்து உள்ளது என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நிலவரப்படி (அக்-10) சென்னையில் 22-கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5.380க்கும், சவரனுக்கு ரூ.60 அதிகரித்து, ரூ.43,040க்கும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதே போல வெள்ளி விலையில் ஏதும் மாற்றமின்றி ரூ.75.50க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.73,500க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய நிலவரம் (அக்டோபர் 10)

  • 1கிராம் தங்கம்(22கேரட்) - ரூ.5,380
  • 1சவரன் தங்கம்(22கேரட்) - ரூ.,43,040
  • 1கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ 5,850
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ46,800
  • 1கிராம் வெள்ளி - ரூ.73.50
  • 1-கிலோ வெள்ளி - ரூ.73,500

இதையும் படிங்க: இஸ்ரேலை நோக்கி விரைகிறது அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல்!

ABOUT THE AUTHOR

...view details