தமிழ்நாடு

tamil nadu

"சட்டப்பேரவை இல்லை; மன்னராட்சி தர்பார்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

By

Published : Apr 12, 2023, 7:56 PM IST

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதை முன் வைத்து "நடப்பது சட்டப்பேரவை இல்லை, மன்னராட்சி தர்பார்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

”நடப்பது பேரவை இல்லை, மன்னராட்சி தர்பார்” - ஜெயக்குமார் விமர்சனம்
”நடப்பது பேரவை இல்லை, மன்னராட்சி தர்பார்” - ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 11) விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சட்டப் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அத்துறையின் அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது பேசிய உதயநிதி, "இன்று (ஏப்ரல் 11) தொழில்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பிறந்தநாள். அவருக்கும் மட்டுமல்ல, என் மகள் தன்மயாவிற்கும் இன்று பிறந்தநாள்" என கூறினார். இதற்கு குறிக்கிட்டு சபாநாயகர் அப்பாவு, "இந்த சபை இருவருக்கும் சேர்த்து, பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறது" என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வை கருத்தில் கொண்டு சென்னை ராயபுரம் தொகுதியில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஜெயக்குமார். நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சட்டப் பேரவை என்ன மன்னராட்சி தர்பார் மண்டபமா? சட்ட மன்றத்தில் உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்களுக்கு சபாநாயகர் வாழ்த்துக்கள் சொல்லலாம். அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியது சரி. ஆனால் உதயநிதி மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எதற்கு?.

அதுவும் அனைத்து திமுக உறுப்பினர்கள், அமைச்சர்கள் மேலே உள்ள மாடத்தை பார்த்து கையெடுத்து கும்பிடுகின்றனர். இப்படிபட்ட கொத்தடிமைகளா இருக்கின்றனர். உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் கூறினார்கள் சரி. ஆனால் சட்டப்பேரவை சபாநாயகர் பதவி என்பது ஒரு மாண்புக்குரிய பதவி. எந்தவொரு அரசு பதவி, பேரவை உறுப்பினராக இல்லாத உதயநிதியின் மகளுக்கு சபாநாயகர் வாழ்த்து கூறி பேரவையின் மாண்பை சீர்குலைத்து உள்ளார்" என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய ஜெயக்குமார், "அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் இந்த திமுக அரசு முடக்கி உள்ளது. குறிப்பாக அம்மா உணவகம், அம்மா கிளினிக், அம்மா இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை நிறுத்தி விட்டது. ரூ.1000 உரிமை தொகை வழங்குவது தொடர்பாக பதிவுச் செய்த கோவையை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப துறை நிர்வாகியை கைதி செய்து உள்ளது இந்த திமுக அரசு. திமுக அரசில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கிரிக்கெட் வாரியத்திற்கு தலைவர் அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி. திமுகவில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு ஐபிஎஸ் டிக்கெட் வழங்கும் போது அதிமுக உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டியது தானே. இதற்கு அமித்ஷாவின் மகனிடம் கேளுங்கள் என்று உதயநிதி பேசியது பொறுப்பில்லாத தன்மையாக பார்க்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் பக்குவம் இல்லாமல் உள்ளது" எனவும் விமர்சித்து உள்ளார்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு வெற்றிக்கு பிறகு முதல் முறையாக சட்டமன்றம் சென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ABOUT THE AUTHOR

...view details