தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஏஜென்டுகளை நம்பி வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் நிலையுள்ளது - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

போலி ஏஜென்டுகளை நம்பி, வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் நிலை காணப்படுகிறது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் போலி ஏஜெண்டுகளை நம்பி சிக்கித் தவிக்கும் நிலை காணப்படுகிறது
வெளிநாடுகளில் போலி ஏஜெண்டுகளை நம்பி சிக்கித் தவிக்கும் நிலை காணப்படுகிறது

By

Published : Nov 2, 2022, 10:31 PM IST

சென்னை:சென்னை தலைமைச்செயலகத்தில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வெளிநாடுகளில் போலி ஏஜென்டுகளை நம்பி சிக்கித்தவிக்கும் நிலை காணப்படுகின்றது என்றார்.

மேலும் சிக்கித் தவிப்பவர்களை உடனுக்குடன் மீட்டு வருகிறோம் என்ற அவர், 35 பேர் குவைத் நாட்டில் கட்டுமானப்பணிக்கு சென்ற நிலையில், உணவு, வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர் எனக் கூறினார். எந்த நாட்டிற்கு? என்ன வேலைக்காக? யார் நிறுவனத்திற்கு செல்கிறீர்கள் என்பதை மக்கள் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

பதிவு செய்துவிட்டுச்சென்றால் அரசு கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். மாலத்தீவிற்குச்சென்று தமிழர்கள் வேலை செய்யும் இடங்களில் ஆய்வு செய்தோம் என்றும்; ஒப்பந்ததாரர்கள் மூலமாக ஊதியம் வழங்கப்படுகிறதா என விசாரித்தோம் என்றும் கூறினார்.

மேலும், பல்வேறு நாடுகளில் வேலைக்குச்செல்வதற்கு அரசின் துறை மூலமாக அனுப்பும் பணியும் நடைபெறுகிறது எனவும்; இங்கிலாந்து நாட்டில் 500 செவிலியர் தேவை என கேட்கப்பட்டுள்ளது என்றும்; யார் முன் வருகிறார்கள் எனப் பார்த்து பயிற்சி வழங்கப்பட்டு அனுப்பப்படுவர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க:'போன் பே' தொடர்ந்த வழக்கு - 'மொபைல் பே' நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details