தமிழ்நாடு

tamil nadu

திருட்டு பைக்கில் ஐந்து பேர் பயணம்; போக்குவரத்து போலீசார் விசாரணை..

By

Published : Nov 7, 2022, 10:50 AM IST

சென்னையில் திருட்டு பைக்கில் சென்ற ஐந்து பேர், பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வீடியோ வலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

திருட்டு பைக்கில் ஐந்து பேர் பயணம் செய்தவர்கள் பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தினர்
திருட்டு பைக்கில் ஐந்து பேர் பயணம் செய்தவர்கள் பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தினர்

சென்னை: பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி போக்குவரத்து போலீசார் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் வாகன ஓட்டி ஒருவர், இரண்டு சிறுவர் மற்றும் இரண்டு சிறுமி என ஐந்து பேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியானது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஐந்து பேரும் மற்ற இரு சக்கர வாகனங்களுக்கு போட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான செயலில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.

திருட்டு பைக்கில் சென்ற ஐந்து பேர், பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தினர்

அந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் ஓட்டிய இரு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக அவர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சென்னையில் ஆளில்லாத இடங்களிலோ, போக்குவரத்து போலீசார் இல்லாத இடங்களிலோ இரு சக்கர வாகனத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்து அனுப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சிறுவர்களை போதை பொருட்களை உபயோகிக்க வற்புறுத்திய இளைஞர்கள்..

ABOUT THE AUTHOR

...view details