சென்னை:கரோனா காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி திட்டத்தில் 1980-81ஆம் ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் உட்பட அனைவரும் தொலைதூரக் கல்வித்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத பல்கலைக்கழக மானியக்குழு அனுமதித்தது. இதன்படி 2020ஆம் ஆண்டு மே மாதத்தில், நடந்த தேர்வுகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகளை வெளியிட்ட போது 116 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, தேர்வுக்குப் பதிவு செய்யாமலேயே மாணவர்கள் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த பல்கலைக்கழகம், பேராசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவினர் நடத்திய விசாரணை அறிக்கையை, பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தனர்.