தமிழ்நாடு

tamil nadu

’சரக்கு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

By

Published : Apr 12, 2023, 10:50 PM IST

மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி வரும் "சரக்கு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

"சரக்கு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.
"சரக்கு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன்‌ நடிகர்களிலேயே மிகவும் வித்தியாசமான நடிப்பினை வெளிப்படுத்தியவர் நடிகர்‌ மன்சூர் அலிகான். திரையில் கொடூர வில்லனாக இருக்கும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது என்பார்கள். இவரும் இந்த கூற்றிற்கு தகுந்தார்போல் குணம் கொண்டவர். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் மன்சூர் அலிகானின் வில்லத்தனம் மிரட்டலாக இருக்கும். படம் பார்க்கும் நமக்கே இவரை கொலை செய்யலாம் என்று தோன்றும் அளவிற்கு தன் நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார்.

"சரக்கு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ஆனால் நேரில் இவர் ரொம்பவும் ஜாலியான மனிதர். அதுவும் இந்த 2k படங்களில் காமெடி வில்லனாக அதிரடி கம்பேக் கொடுத்து ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்கச் செய்து தன்வசப்படுத்தி வருகிறார். தற்போது லியோ படத்தில் நடிகர் விஜய் உடன் இணைகிறார் என்பது ரசிகர்களிடையே வரவேற்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இவர் தன் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பல படங்களை இயக்கியுள்ளார்.

சமீப காலமாக காமெடி வில்லனாக நடித்து வரும் இவர், லியோ படத்தில் ஒரிஜினல் வில்லனாக வருவார் என்று நம்பலாம். ஏனென்றால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர். கைதி படமே இவரை வைத்து எழுதியதுதான் என்று லோகேஷ் கனகராஜே சொல்லியுள்ளார். இதனால் லியோ படத்தில் முக்கியமான வேடம் இவருக்கு இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் நம்பப்படுகிறது.

இந்நிலையில் மன்சூர் அலிகான் தற்போது ‘சரக்கு’ என்ற‌ படத்தில் நடித்து வெளியாக உள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், சரக்கு படம் வெளியானால் தமிழகத்தையே திருப்பிப் போடும் படமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இப்படம் தமிழ்நாட்டை பாடாய்படுத்தும் மதுவை வைத்தும் மற்றும் ஒரு புரட்சி படைப்புதான் "சரக்கு" என்றார், மன்சூர் அலிகான்.

மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவி மரியா, லொள்ளு சபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இப்படம் ஜெயக்குமார்.ஜே இயக்கத்தி,ல் ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரிக்கிறார். மேலும் ஒளிப்பதிவு அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ்.டி இசை அமைக்கின்றனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின்‌ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'லியோ' படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட மன்சூர் அலிகான்!

ABOUT THE AUTHOR

...view details