தமிழ்நாடு

tamil nadu

தாம்பரம் அருகே மகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தந்தை கைது

By

Published : Mar 5, 2021, 12:48 PM IST

சென்னை: தாம்பரம் அருகே மகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Father arrested in Posco act at Tambaram, Father sexually harassed his daughter in Tambaram, Posco act in Tambaram, Chennai latest, மகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தந்தை கைது, தாம்பரத்தில் தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது, போக்சோ சட்டம், தாம்பரம், சென்னை மாவட்டச்செய்திகள்
father-arrested-in-pocso-act-for-sexually-harassing-daughter-near-tambaram

சென்னை தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேந்தவர்கள் மதன்(41), ரேனுகா(30) தம்பதி. இவர்களுக்கு பதினான்கு, பதினாறு வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மதன் வாஷிங் மெஷின் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். அவர் குடிபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 04) ரேனுகா பெரம்பூரில் துணி வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார். மூத்த மகளும் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்த இரண்டாவது மகளிடம் அதிக மதுபோதையில் வந்த தந்தை மதன், தன் மகள் என்று கூட பாராமல் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து ரேனுகா இன்று (மார்ச் 05) வீட்டிற்கு வந்ததும் அவரின் இரண்டாவது மகள் அழுது கொண்டே நடந்ததை பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து ரேனுகா, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மதனை கைது செய்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மூதாட்டி பாலியல் வன்புணர்வு செய்து கொலை: ஆறுமணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details