தமிழ்நாடு

tamil nadu

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

By

Published : Jul 22, 2022, 4:17 PM IST

அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை 1,92,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

இதனைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எனவே பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூலை 27 ஆம் தேதி வரை சமர்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:12ஆம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம்? - 'நான் முதல்வன்' திட்டம் மூலம் அறியலாம்!

ABOUT THE AUTHOR

...view details