தமிழ்நாடு

tamil nadu

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM

By

Published : Feb 12, 2021, 5:06 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ..

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm

விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் உடலில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மாதத்தில் 20 முதியவர்களிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட திருடன் கைது

சென்னை: கடந்த ஒரு மாதத்தில் 20 முதியவர்களின் கவனத்தை திசைதிருப்பி தங்க நகைகளை கொள்ளையடித்த திருடனை காவல் துறையினர் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.

பெட்ரோல் விலை கூடினாலும் விரைவில் குறையும் - குஷ்பு

சென்னை: தற்போதைய சூழலில் பெட்ரோல் விலை கூடினாலும் விரைவில் விலை குறையும் என்று திருவல்லிக்கேனி மற்றும் சேப்பாக்கம் தொகுதிகளுக்கான பாஜக பொறுப்பாளர் குஷ்பு தெரிவித்தார்.

சூரப்பா மீதான புகார்: அலுவலர்களிடம் அடுத்த வாரம் விசாரணை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா புகார் விவகாரத்தில் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அடுத்த வாரம் முதல் அலுவலர்களை அழைத்து விசாரணை நடத்த உள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

லாலு பிரசாத் யாதவ்வுக்கு பிணை மறுப்பு!

பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வின் பிணை மனு விசாரணை பிப்ரவரி 19ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை சிகிச்சை குறித்து நீதிமன்றம் கேள்வி?

மதுரை அரசு இராசாசி பல்நோக்கு மருத்துவமனை உபகரணங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்ன விதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன? சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது எனில், என்ன காரணத்திற்காகச் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.

குடியரசுத் தலைவருக்கு விடுதலை பத்திரத்தை அனுப்பி வைத்த லாலு மகன்

தனது தந்தையை விடுதலை செய்யக்கோரி பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ் 50 ரூபாய் மதிப்புள்ள விடுதலை பத்திரத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

வாழ்வாதாரத்துக்கு நுரையீரல் போன்றது நீர்நிலைகள் - நீதிமன்றம் கருத்து

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அலுவலர்களின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் 20 முதியவர்களிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட திருடன் கைது

சென்னை: கடந்த ஒரு மாதத்தில் 20 முதியவர்களின் கவனத்தை திசைதிருப்பி தங்க நகைகளை கொள்ளையடித்த திருடனை காவல் துறையினர் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details