ETV Bharat / state

ஒரு மாதத்தில் 20 முதியவர்களிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட திருடன் கைது

author img

By

Published : Feb 12, 2021, 4:46 PM IST

சென்னை: கடந்த ஒரு மாதத்தில் 20 முதியவர்களின் கவனத்தை திசைதிருப்பி தங்க நகைகளை கொள்ளையடித்த திருடனை காவல் துறையினர் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.

thief arrested for robbing 20 elderly people in a month at chennai
thief arrested for robbing 20 elderly people in a month at chennai

சென்னை ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலை துவாரகா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிற்படுத்தப்பட்டோர் அணியின் தென் சென்னை மாநில பொதுச்செயலாளரான பிரசாத். இவரது தாயார் ராவணம்மா கடந்த மாதம் 23ஆம் தேதி மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அருகில் உள்ள தனது உறவினரின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறோம். தாங்கள் குழந்தையை வாழ்த்த விழாவிற்கு வருகை தர வேண்டும் எனக் கூறி ராவணம்மாவின் கைகளில் இருந்த மூன்று மோதிரங்களை பறித்து சென்றுள்ளார்.

thief arrested for robbing 20 elderly people in a month at chennai
திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டபோது

இந்த சம்பவம் குறித்து ராவணம்மாள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கு அடுத்தடுத்த நாட்களில் ஐஸ்ஹவுஸ், ராயப்பேட்டை, எஸ்.ஆர்.எம்.சி. பகுதிகளில் இதேபோன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதியவர்களை குறிவைத்து அவர்கள் கழுத்திலிருந்த சங்கிலி மற்றும் விரல்களில் அணிந்திருந்த மோதிரங்களை பறித்து சென்றதாக புகார்கள் வந்தன.

குற்றவாளியை பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவ இடங்களில் உள்ள சுமார் 30 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனியாக செல்லும் முதியவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகைகளை பறித்துச் சென்றது பெரம்பூரைச் சேர்ந்த திருமலை(45) என்பது தெரியவந்தது.

மேலும், திருமலை டிபி சத்திரம் பகுதியில் தலைமறைவாக இருப்பதை அறிந்த காவலர்கள் அங்கு சென்று அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் தங்க நகைகளை பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.

thief arrested for robbing 20 elderly people in a month at chennai
கைது செய்யப்பட்ட திருடன் திருமலை

இவர், தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் அருகில் ஒரு நகைக்கடை திறந்து இருப்பதாகவும் அங்கு வயதான முதியவர்களுக்கு இலவசமாக நகைகள் கொடுப்பதாகவும் கூறுவார். பின்னர் நகைகள் அணிந்து சென்றால் நகைக்கடையில் இலவசமாக நகைகள் தர மாட்டார்கள் எனக்கூறி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றொ தன்னிடம் கொடுத்து விட்டு, நகைக்கடையில் தங்க நகையை வாங்கியவுடன் மீண்டும் அதனை ஒப்படைப்பதாகவும் கூறி நகைகளை பறித்து செல்வார்.

அதுமட்டுமின்றி, அருகில் தனது உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறோம். தாங்கள் வந்து குழந்தையை ஆசீர்வதித்தால் குழந்தையின் பெற்றோர் ஒரு சவரன் தங்க நகை கொடுப்பார்கள் எனக் கூறி முதியவர்களின் நகைகளை பறித்து செல்வதாக கூறியுள்ளார். இந்த இரண்டு முறைகளையும் வாடிக்கையாக வைத்து திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இவர் மீது எஸ்பிளனேடு, அமைந்தகரை, அரும்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ஜாம்பஜார், அண்ணாசாலை, எஸ்.ஆர்.எம்.சி, கோடம்பாக்கம், சேலையூர், குமரன் நகர் திருவேற்காடு, ஐஸ்ஹவுஸ் உட்பட சென்னையின் பல காவல் நிலையங்களில் இதேபோல முதியவர்களை ஏமாற்றி நகைகளை பறித்துச் சென்ற வழக்குகள் 25க்கும் மேல் உள்ளது தெரியவந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு அமைந்தகரையில் ஒரு மூதாட்டியை ஏமாற்றி நகை பறிக்கும்போது சுதாரித்து தப்பிக்க முயன்ற மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்து நகையை பறித்த வழக்கில் திருமலை சிறைக்குச் சென்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

முதியவர்களிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட திருடன்

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் தனியாக நடந்து செல்லும் முதியவர்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக ஜனவரி மாதம் 23ஆம் தேதி மயிலாப்பூர் பகுதியிலும் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் ராயப்பேட்டை மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதிகளிலும் தனியாக செல்லும் 18 முதியவர்களை குறிவைத்து நகைகளைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. மேலும், இவர் டிபி சத்திரத்தில் உள்ள திருமணத்தை மீறி உறவு கொண்டுள்ள பெண்ணிடம் பறிக்கப்பட்ட நகைகளை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து காவல் துறையினர் தற்போதுவரை 40 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவரிடமிருந்து நகைகளை வாங்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.