தமிழ்நாடு

tamil nadu

சமத்துவத்தை போற்றும் திருக்குறள் மாநாடு - திருமுருகன் காந்தி

By

Published : Aug 8, 2019, 7:41 PM IST

சென்னை: தந்தை பெரியார் வழியில் திருக்குறள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி வெற்றிபெறுவோம் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

periayar movement

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 'கேரளாவில் நடந்த பிராமணர் மாநாட்டில் மனிதர்கள் அனைவரும் சமமில்லை, சமமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான கருத்தை முன்வைத்தனர்.

பெரியாரிய உணர்வாளர்கள்

அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அனைத்து உயிர்களும் சமம் என்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மொழிந்த திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மாநாடாக தந்தை பெரியார் வழியில் 1949ஆம் ஆண்டு நடத்த மாநாட்டின் தொடர்ச்சியாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் ஒருங்கிணைத்துள்ளது. நாம் அனைவரும் சமம், நமக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பதை உணர்த்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

ஆனால், இதை கொச்சைப்படுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தவறான கருத்துகளை கூறிவருகிறார். திருக்குறளில் சனாதனத்தை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. மனிதர்கள் சமமற்றவர்கள் என்பதே இந்துத்துவத்தின், வேதத்தின் அடிப்படை கருத்து. எங்கள் வீடுகளில் திருக்குறள் இருக்கிறது. அவர்கள் வீடுகளில் வேதங்கள் இருக்கிறது. ஆசியாவில் பல்வேறு கருத்துகளை கொண்டுள்ளவர்கள் இருந்தாலும் திருக்குறள் மீது அவர்களுக்கு கசப்புணர்வு கிடையாது.

ஹெச்.ராஜா, பாஜக மட்டும் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்றால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று திருக்குறள் கூறும் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்வதால் எதிர்க்கிறார்கள். அனைத்து தடைகளையும் மீறி இந்த மாநாடு மாபெரும் வெற்றி அடையும். இது வரலாற்று சிறப்புமிக்க மாநாடு' என்றார்.

Intro:Body:பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி திருக்குறள் ,ஆநாடு நடைபெறவுள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “சமீபத்தில் கேரளாவில் நடந்த பிராமணர் மாநாட்டில் மனிதர்கள் அனைவரும் சமமில்லை, சமமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான கருத்தை முன்வைத்தார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அனைத்து உயிர்களும் சமம் என்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மொழிந்த திருவள்ளூவர் எழுதிய திருக்குறளை மாநாடாக தந்தை பெரியார் வழியில் 1949 ஆம் ஆண்டு நடத்த மாநாட்டின் தொடர்ச்சியாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் ஒருங்கிணைத்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி காமராஜர் அரங்கில் சமயம் கடந்து திருக்குறளை முன்னெடுத்து செல்லும் அற்ஞர்கள் கல்ந்துகொள்ளும் மாநாடு காலை முதல் இரவு வரை நடைபெறவுள்ளது. நாம் அனைவரும் சமம், நமக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பதை உணர்த்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

ஆனால் இதை கொச்சைப்படுத்தும் விதமாக பாரதிய ஜனதா க்டசியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்துகளை கூறி வருகிறார். இதை மனிதர்கள் அனைவரும் சமமல்ல என்றூ சொன்ன பிரமாணர் சங்கத்தில் தொடர்ச்சியாகவே பார்க்கிறோம். திருக்குறளில் சனாதனத்தை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. மனிதர்கள் சமமற்றவர்கள் என்பதே இந்துத்துவத்தின், வேதத்தின் அடிப்படை கருத்து. இதை எதையும் திருக்குறள் கூறவில்லை அதனால் எச்.ராஜா போன்றோர்கள் இதை முன்னெடுத்து செல்வதில்லை. எங்கள் வீடுகளில் திருக்குறள் இருக்கிறது. அவர்கள் வீடுகளில் வேதங்கள் இருக்கிறது.

திருக்குறளை நாடு முழுவதும் கொண்டு செல்வோம் என்று சொன்ன பாரதிய ஜனதா கட்சை அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் லாப நோக்கத்தில் செயல்படுவதை நாம் பார்த்து வருகிறோம். ஆசியாவில் பல்வேறு கருத்துகளை கொண்டுள்ளவர்கள் இருந்தாலும் திருக்குறள் மீது அவர்களுக்கு கசப்புணர்வு கிடையாது. எச்.ராஜா, பாரதிய ஜனதா கட்சி மட்டும் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்றால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று திருக்குறள் கூறும் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்வது தான் எதிர்க்கிறார்கள். அனைத்து தடைகளையும் மீறி இந்த மாநாடு மாபெரும் வெற்றி அடையும். இந்த மாநாட்டில் இதுவரை திருக்குறளை பற்றி பல்வேறு அறிஞர்கள் எழுதி பொதுவெளியில் கிடைக்காத உரையை தேடி எடுத்து தொகுத்து வெளியிடவுள்ளோம். எனவே இது வரலாற்று சிறப்புமிக்க மாநாடு’ என்று தெரிவித்தார்.

திருக்குறளில் தமிழ் என்று எந்த ஒரு குறளிலும் குறிப்பிடவில்லை என்ற கருத்துக்கு பதிலளித்த தமிழக் மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், “ திருக்குறள் எழுத்தப்பட்ட மொழி தமிழ். மொழிப்பெயர்தேயம் என்று புறநானூறு, அகநானூறுகளில் குறிப்பிடுகிறார்கள். பிற மொழி பேசுகின்ற இடத்தில் ஒரு மொழியை சுட்டிக்காட்ட மொழிக்கு பெயர் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் அவர்களை வேறுபடுத்த தனித்தனி பெயர்கள் இருக்கும். ஆனால் ஒரு குழந்தை மட்டும் இருந்தால் பெயர் வைக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல் தான் ஒற்றை மொழி இருந்த சமுதாயத்தில் அதற்கு பெயர் வைக்கப்படாத காலம் அது. இதனால் தான் சிலப்பதிகாரத்தில் தமிழ் மொழி, தமிழ் இனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது பழந்தமிழ் இலக்கியமான தொல்காப்பியம், திருக்குறள் போன்றவைகளில் தமிழ் மொழி என்று குறிப்பிடப்படவில்லை. அதன்பிறகு அண்டை மொழிகள் தோன்றின பிறகு தம்மில் மொழி தமிழ் மொழி என்று அடையாளப்படுத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details