சென்னை:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த மாதம் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவி காரில் கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகம்மது ஆகியோரையும் அதற்கு உடந்தையாக இருந்த கயல்விழி, அன்னலட்சுமி ஆகியோரையும் சேர்த்து 5 நபரையும் பரமக்குடி போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கில் இன்னும் சில அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், உடனடியாக இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தைத் தொடர்ந்து கடைகளை அடைத்தும் அவர்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதனையடுத்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஐந்து நபர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 0