தமிழ்நாடு

tamil nadu

பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு!

By

Published : Nov 10, 2021, 1:05 PM IST

Updated : Nov 10, 2021, 1:10 PM IST

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு மழை பாதிப்பு, குறித்த விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு
பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்துவரும் மழையால் சாலைகளில், வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் 4ஆவது நாளாக மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார். மாநகராட்சி அலுவலர்கள், தீயணைப்பு துறையினர் சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.

பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு

சென்னையில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று (நவ.10) எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று தமிழ்நாட்டில் மழை பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் விவரங்களை கேட்டறிந்தார்.

பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு

தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட பொதுமக்கள் ஒருவரிடம் தொலைபேசி மூலமாக முதலமைச்சர் பேசினார்.

இதையும் படிங்க:நவ.13-ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு?

Last Updated :Nov 10, 2021, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details