தமிழ்நாடு

tamil nadu

செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை!

By

Published : Jul 7, 2022, 2:43 PM IST

Updated : Jul 7, 2022, 4:54 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்

சென்னை:44ஆவது செஸ் ஒலிம்பியாட் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க 187 நாடுகள் பதிவு செய்துள்ளதோடு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். அண்மையில் தலைமை செயலாளர் தலைமையிலான குழுவினர் போட்டி ஏற்பாடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

இந்தநிலையில் இன்று (ஜூலை 7) சென்னை தலைமை செயலகத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள், அதற்காக மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில், தலைமை செயலாளர் இறையன்பு, விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா, விளையாட்டுத் துறை அலுவலர்கள், செஸ் ஒலிம்பியாட் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: சர்வதேச 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி: தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

Last Updated :Jul 7, 2022, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details