தமிழ்நாடு

tamil nadu

சொந்த ஊரில் உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய முதலமைச்சர் பழனிசாமி!

By

Published : Jan 14, 2021, 7:23 PM IST

சேலம்: எடப்பாடி அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டார்.

முதலமைச்சர் பழனிசாமி!
முதலமைச்சர் பழனிசாமி

இரண்டு நாள் பயணமாக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் இன்று (ஜனவரி 14) நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

முன்னதாக, ஊரின் மையப் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர், கோயில் திடலில் சமத்துவ பொங்கல் வழிபாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களோடு அமர்ந்து, உணவு சாப்பிட்டார். அங்கிருந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் முதலமைச்சர் உடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

காளைக்கு வாழைப்பழம் கொடுக்கும் முதலமைச்சர்

முதலமைச்சர் வருகையை ஒட்டி சப்பானிப்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொங்கல் விழா கொண்டாடிய முதலமைச்சர் பழனிசாமி!

இதையும் படிங்க:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... பாயும் காளைகள்: துணிந்து அடக்கும் வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details