தமிழ்நாடு

tamil nadu

Chennai Rains - சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

By

Published : Nov 14, 2021, 7:12 PM IST

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

சென்னையில் சில இடங்களில் மழைநீர்த் தேக்கம், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன.

சென்னை: வடகிழக்குப் பருவமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகளைக் கொண்டு மழை நீரைத் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்கள், பள்ளங்கள் ஏற்பட்ட இடங்களில் தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று (நவ.14) தற்போதைய போக்குவரத்து நிலவரப்படி,

போக்குவரத்து மாற்றம்

மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் லஸ் வழியாக அனுப்பப்படுகிறது. மாநகரப்பேருந்துகள் லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலையை நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

பெரம்பூர் பேரக்ஸ் சாலை அஷ்டபுஜம் ரோடு சந்திப்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

டவுட்டன் சந்திப்பிலிருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகரப் பேருந்துகள் பிரிக்கிளின் ரோடு, ஸ்டிராஹன்ஸ் ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும்.

அதேபோல் புளியந்தோப்பிலிருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாற்றம்: மறு பரிசீலனை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details