தமிழ்நாடு

tamil nadu

பெரியமேடு பகுதியில் இளைஞர் கட்டையால் அடித்து கொலை

By

Published : Mar 14, 2020, 7:33 AM IST

சென்னை: முன்விரோதம் காரணமாக பெரியமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder  பெரியமேடு கொலை  சென்னை குற்றச் செய்திகள்  chennai crime news  chennai murder periyamedu  chennai periyamedu murder youth died
பெரியமேடு வாலிபர் கொலை

பெரியமேடு பட்டுநூல் சர்தார் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (24), நேற்றிரவு 9 மணியளவில் சென்னை ராஜா முத்தையா சாலை சூலை ரவுண்டானா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த புளியந்தோப்பைச் சேர்ந்த தங்கா, ஹேமந்த் குமார், பாலு ஆகியோர் வந்து வாக்குவாத்தில் ஈடுபட்டு கையில் இருந்த கட்டையால் மணிகண்டனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை அருகிலிருந்தவர்கள் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கட்டையால் தாக்கிய நபர்களைத் தேடி வருகின்றனர். மணிகண்டன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சமூக வலைதளங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு - கடலூர் இளைஞர் மீது பாய்ந்தது சைபர் சட்டம்!

ABOUT THE AUTHOR

...view details