தமிழ்நாடு

tamil nadu

சென்னை ஓபன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடக்கம்...

By

Published : Aug 22, 2022, 9:53 PM IST

சென்னை ஓபன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் நாளை தொடங்கவுள்ளது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 126 கோல்ஃப் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Chennai
Chennai

சென்னை: பிரபஷனல் கோல்ஃப் டூர் ஆப் இந்தியா (Professional Golf Tour of India - PGTI) சார்பில், தேசிய அளவிலான கோல்ஃப் போட்டி நாளை(ஆக.23) சென்னையில் தொடங்கவுள்ளது. இந்த "சென்னை ஓபன் கோல்ஃப் சாம்பியன்ஷிப்" போட்டி, தமிழ்நாடு கோல்ஃப் கூட்டமைப்பின் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 126 கோல்ஃப் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த வாரம் கோயம்புத்தூரில் பிஜிடிஐ சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கோல்ஃப் போட்டியில் வெற்றி பெற்ற கலின் ஜோஷி இப்போட்டியில் கலந்து கொள்கிறார். கரந்தீப் கோச்சார், மனு கந்தாஸ், அமன் ராஜ், ஷமிம் கான் ஆகிய வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

சென்னையிலிருந்து இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு 40 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கோல்ஃப் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இசைக் கச்சேரியில் போலீசார் மீது தாக்குதல்... 50 பேர் மீது வழக்குப்பதிவு...


ABOUT THE AUTHOR

...view details