தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

By

Published : Sep 4, 2021, 3:44 PM IST

chennai met forecast today
மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்.4) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை (செப்.5) நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்
நாளை மறுதினம் (செப்.6) நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு
வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.

சென்னையை பொறுத்தவரை..
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மழைப்பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்), ஏற்காடு (சேலம்) 13, சாத்தனுர் அணை (திருவண்ணாமலை), இல்லையாங்குடி (சிவகங்கை) தலா 6 செ.மீ, ஒகேனக்கல் (தர்மபுரி), ஜெயம்கொண்டாம் (அரியலூர்), தலா 5 செ.மீ., மணல்மேடு (மயிலாடுதுறை), விருதாச்சலம் (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 4 செ.மீ.,, மரக்காணம் (விழுப்புரம்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பொண்ணை அணை (வேலூர்) தலா 3 செ.மீ. பதிவாகியுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

எட்டயபுரம் (தூத்துக்குடி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), ஆர்.எஸ்.மங்களம் (ராமநாதபுரம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 2, மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமாரி), பேராவூரணி (தஞ்சாவூர்), மங்களபுரம் (நாமக்கல்), டி.ஜி.பி அலுவலகம் (சென்னை) தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக வங்ககடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதிகள்
அதேபோல், செப்.5 முதல் செப். 7ஆம் தேதி வரை கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் இன்று முதல் செப்.8 ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்தப் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details