தமிழ்நாடு

tamil nadu

2ஆவது மணம் குற்றச்சாட்டு நிரூபிப்பு: குறைக்கப்பட்ட தண்டனை

By

Published : Feb 5, 2022, 6:48 PM IST

வரதட்சணை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும், இரண்டாவது மணம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாலும் கணவருக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

dowry harassment case chennai high court dowry harassment order of chennai high court வரதட்சணை குற்றச்சாட்டு இரண்டாம் திருமணம் விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது மணம் குற்றச்சாட்டு நிரூபிப்பு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அரியலூர் மாவட்டம், அன்னிமங்கலத்தைச் சேர்ந்த முருகானந்தமும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த தமயந்தியும் 2001இல் காதல் திருமணம் செய்துகொண்டனர். வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கும் தமிழமுதன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், தன்னை புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாகவும், மேலும் சட்டவிரோதமாக, தனது சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாகவும் கூறி, முருகானந்தம், அவரது பெற்றோர், சகோதரர் உறவினர்களுக்கு எதிராக, தமயந்தி, ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், முருகானந்தத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராதத் தொகையை தமயந்திக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது. அதேபோல் குற்றஞ்சாட்டப்பட்ட முருகானந்தத்தின் உறவினர்களுக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து முருகானந்தம் உள்ளிட்ட அவரது உறவினர்கள் தாக்கல்செய்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, முருகானந்தம் மீதான வரதட்சணை தடைச் சட்டம், வன்கொடுமை தடைச் சட்டப் பிரிவுகளின்கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பெண்கள் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு விதித்த ஐந்து ஆண்டு சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்தார்.

மேலும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகானந்தத்தின் உறவினர்களை விடுதலை செய்த நீதிபதி, பெண்களின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவது சமுதாயத்தில் தொடர்வதாகவும், அதற்குப் பெண்களே பழியாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐஐடி சென்னையில் சாதி பாகுபாடு: முன்னாள் உதவிப் பேராசிரியர் பிரதமருக்கு கடிதம்

ABOUT THE AUTHOR

...view details