தமிழ்நாடு

tamil nadu

அக்.31-க்குள் ரூ.500 கோடி சொத்து வரி வசூலிக்கத் திட்டம்; சென்னை மாநகராட்சி கறார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 10:58 PM IST

Chennai corporation: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், அரையாண்டில் மொத்தம் ரூ.850 கோடி சொத்து வரிவசூலிக்க வேண்டியுள்ள நிலையில், சலுகை அறிவித்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் அக்.31ஆம் தேதிக்குள் ரூ.500 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி பிரதான வருவாயாக உள்ளது. மொத்தமுள்ள 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு ரூ.750 கோடி என ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வருவாய் வாயிலாக, மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மைப்பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998-ன் படி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்.30-க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்திருந்தது. அவ்வாறு சொத்து வரி செலுத்த தவறும் நிலையில், சொத்து உரிமையாளர்கள் அக்.1 முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி கடந்த ஜூன் மாதமே தெரிவித்து இருந்தது.

அதேபோல், கடந்த 2022–23ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டடுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டிருந்தது. இதேபோல, சொத்து உரிமையாளர்கள் அக்.1 முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூ.769 கோடி வரி வசூல்:இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 2ஆம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.31ஆம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்.30ஆம் தேதிக்கு முன்பாகவும், 2ஆம் அரையாண்டு சொத்துவரியை அக்.30ஆம் தேதிக்கு முன்பாகவும்; அதாவது, முதல் நிதியாண்டு மற்றும் இரண்டாவது நிதியாண்டு தொடங்கிய முதல் மாதத்திற்குள் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீத அதிகபட்சம் ரூ.5ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இம்மாத இறுதிக்குள் ரூ.500 கோடி வசூலிக்க இலக்கு: அக்.31ஆம் தேதிக்குள் ரூ.500 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு முன்பு வரை, சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, அக்.31ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த தவறினால், அபராதமாக மாதத்துக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறு செலுத்தாலம்:சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை வரிவசூலிப்பாளரிடம் காசோலை, வரைவோலை மற் றும் கடன்/பற்று அட்டை மூலமாக வும், மாநகராட்சி வளாகத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக வும், மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை செயலி மூலமாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி நிர் வாகம் அறிவித்துள்ளது என்று முன்னதாகவ பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க:மனிதம் மரத்துப் போய்விட்டதா?.. உலக நாடுகள் அனைத்தும் ஓரணியாக நின்று போரை நிறுத்த வேண்டும்..!" மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details