ETV Bharat / state

மனிதம் மரத்துப் போய்விட்டதா?.. உலக நாடுகள் அனைத்தும் ஓரணியாக நின்று போரை நிறுத்த வேண்டும்..!" மு.க.ஸ்டாலின்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 6:11 PM IST

Israel Hamas war:காசாவில் உள்ள மருத்துவமனையில் தாக்குதல் நடந்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காசா போர் குறித்து மு.க.ஸ்டாலின்
இஸ்ரேல் காசா போர் குறித்து மு.க.ஸ்டாலின்

சென்னை: இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீன நாட்டிற்கும் இடையேயான விவகாரம் நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இருப்பினும் அதற்கான தீர்வு இன்று வரையிலும் கண்டறியப்படவில்லை என்பது தான் சோகம். பாலஸ்தீன நாட்டின் அரசியல் அமைப்பாக உருவாகிய ஹமாஸ் அமைப்பு, பின் ஆயுதப்படையாக மாறி பல தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரேல் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தி, சிலரை பிணைக்கைதிகளாக சிறைப் பிடித்து சென்றது. இது மீண்டும் போர் சூழல் ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ஹமாஸ் ஆய்த படையும், இஸ்ரேல் ராணுவமும் ஏவுகணைகள் மூலம் தாக்கிக் கொண்டனர். இதில் இரு நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுமார் 10 நாட்களை கடந்து நிகழும் இந்த தாக்குதல்களில், காசா பகுதியை சார்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்தும், உயிர் பயத்திலும் வாழ்ந்து வந்தனர். காசா பகுதிகளில் மருத்துவமனைகள் அனைத்தும் படுகாயம் அடைந்தவர்களும், மரணமடைந்தவர்களின் உடல்களாக நிரம்பி காணப்பட்டன.

இந்நிலையில் நேற்று இரவு காசா நகரப் பகுதியில் உள்ள அல்-அஹ்லி (Al Ahli) மருத்துவமனையில் வான்வழித் தாக்குதல் நிகழ்ந்தது. இந்த தாக்குதல் இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்தியதாகவும், அத்தாக்குதலால் 500க்கும் மேற்பட்டவர்கள் மரண்மடைந்தாகவும் பாலஸ்தீன நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்தார். அதனை ஏற்க மறுத்த இஸ்ரேல் அரசு, அத்தாக்குதல் இஸ்லாமிய ஆயுத படையினரின் ஏவுகணையால் ஏற்பட்டது என அறிவித்தது.

இருந்த போதிலும், போர் விதிகளை மீறி மருத்துவமனையில் தாக்குதல் நிகழ்ந்து, 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, ஐ.நா சபை உட்பட, பல நாட்டு தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், இரு நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் இந்த போரை நிறுத்த ஐ.நா சபையும், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து, அப்பாவி மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில், "போர் என்பதே கொடூரமானது! அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன. போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள்.

மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தர்.

  • போர் என்பதே கொடூரமானது!

    அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக #Gaza பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக…

    — M.K.Stalin (@mkstalin) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர்! 1,100 பேர் பலி! என்ன நடக்கிறது இஸ்ரேலில்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.