தமிழ்நாடு

tamil nadu

கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை - பின்னணி என்ன ?

By

Published : May 17, 2022, 9:24 AM IST

Updated : May 17, 2022, 11:44 AM IST

முறைகேடாக ரூ.50 லஞ்சம் பெற்றுக்கொண்டு சீன நாட்டினருக்கு விசா வாங்கி கொடுத்த விவகாரத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

CBI Raid on Ex Union Minister Pa. Chidambaram Premises cbi-investigation-is-conducting-searches-at-multiple-locations-of-congress-leader-p-chidambaram-son-karti-in-connection-with-an-ongoing-case ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை
CBI Raid on Ex Union Minister Pa. Chidambaram Premises cbi-investigation-is-conducting-searches-at-multiple-locations-of-congress-leader-p-chidambaram-son-karti-in-connection-with-an-ongoing-case ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை இன்று (மே.17) நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2010- 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தின் போது கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து முறைகேடான வழிகளில் பணம் கிடைத்தது தொடர்பாக சிபிஐ சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது இல்லம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை - பின்னணி என்ன ?

இதனிடையே, முறைகேடாக ரூ.50 லஞ்சம் பெற்றுக்கொண்டு சீன நாட்டினருக்கு விசா வாங்கி கொடுத்த விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையில் மூன்று இடத்திலும், மும்பையில் மூன்று இடத்திலும், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலத்தில் ஒரு இடத்திலும் என மொத்தம் ஒன்பது இடத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கார்த்தி சிதம்பரம் பரிசு பொருள் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சிபிஐ இந்த சோதனைகளை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: எத்தனை தடவைதான் சோதனை நடத்தவீங்க!- சிபிஐ சோதனையை கலாய்த்த கார்த்தி சிதம்பரம்!

Last Updated :May 17, 2022, 11:44 AM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details