தமிழ்நாடு

tamil nadu

பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்!

By

Published : Aug 5, 2021, 11:58 AM IST

caste name
சாதிப் பெயர்கள் ()

தமிழ்நாட்டில், பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து தலைவர்கள் ,தமிழறிஞர்கள் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

சென்னை: தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் தலைவர்கள், தமிழறிஞர்களின் பெயருக்கு பின்னால் இடம்பெற்றுள்ள அடையாளத்தைக் குறிக்கும் சாதிப் பெயர்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நீக்கியுள்ளது.

முதற்கட்டமாக 12ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில், 'பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்' எனப்படும் உ.வே சாமிநாத ஐயர் எழுதிய உரைநடைப் பகுதியில் அவரின் பெயருக்கு பின்னால் வரும் ஐயர் நீக்கப்பட்டு உ வே சாமிநாதர் என்று மாற்றி அச்சிடப்பட்டுள்ளது.

அதே போல், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை என்று பெயருக்கு பின்னால் இடம்பெற்றுள்ள சாதியப் பெயரான பிள்ளை நீக்கப்பட்டு இராமலிங்கனார் என்று மாற்றப்பட்டுள்ளது.

ஐயர் நீக்கப்பட்டு உ வே சாமிநாதராக பெயர் மாற்றம்

தமிழ்நாட்டில் உள்ள தெருப்பெயர்கள், சாலைகள் உள்ளிட்டவற்றிக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்ற போது அந்த பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சாதிய பெயர்கள் இடம்பெறாது என்கிற அரசாணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

அந்த அடிப்படையில் தற்போது பாடப்புத்தகங்களில் தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் உள்ளிட்டோரின் பெயர்களுக்குப் பின்னால் இடம்பெறக்கூடிய சாதியப் பெயர்கள் நீக்கப்பட்டு, பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது.

தற்போது முதலமைச்சரின் செயலாளர்கள் நிலை 1 இல் உள்ள உதயச்சந்திரன் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருக்கும்போது தமிழ்நாடு பாடநூல் மாற்றத்திற்கான குழுவில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இல்லத்தரசிகளுக்கு ரூ.1000: ஆகஸ்ட் 15இல் அறிவிக்கிறார் ஸ்டாலின்?

ABOUT THE AUTHOR

...view details