தமிழ்நாடு

tamil nadu

ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில் பயங்கர முரண்பாடு - அண்ணாமலை

By

Published : Sep 26, 2021, 7:12 AM IST

Updated : Sep 26, 2021, 8:40 AM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது; இதை ஏ.கே.ராஜன் கமிட்டி ஏன் பேசவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாவின் 106ஆவது பிறந்த நாள் நேற்று (செப்.25) கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.நகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில் பயங்கர முரண்பாடுகள் உள்ளன. இந்த ஆண்டு 150 மாணவர்களோடு எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தும், தமிழ்நாடு அரசு திறக்க வேண்டாம் என முரண்டு பிடிக்கிறது.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்

இது சமூக நீதிக்கு எதிரானது. தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணம். கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது; இதை ஏ.கே.ராஜன் கமிட்டி ஏன் பேசவில்லை

2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்ததான் அரசு சிந்திக்க வேண்டும். அரசியல் செய்ய தேவையில்லாத விஷப்பரீட்சையை கையில் எடுக்கக்கூடாது. 2020ஆம் ஆண்டு எஸ்.டி சமுதாயத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் மூலம் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் ஆதிக்கம்

நீட் தேர்வால் தனியார் மருத்துவமனைகள் ஆதிக்கம் செய்துவந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. அரசியல் வாதி போல ஏ.கே.ராஜன் பேசுகிறார். கமிட்டியின் தரவுகள் அடிப்படையில் அவர் பேசவில்லை" என்றார்.

இதையும் படிங்க:அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்ய வேண்டும் - சு. வெங்கடேசன் எம்பி

Last Updated :Sep 26, 2021, 8:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details