தமிழ்நாடு

tamil nadu

பி.இ, பி.டெக்.படிப்பு நாளை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

By

Published : Sep 13, 2021, 9:57 PM IST

பி.இ, பி.டெக்.படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் நாளை(செப்.14) காலையில் வெளியிடப்படுகிறது.

be-btech-course-rankings-released-tomorrow
be-btech-course-rankings-released-tomorrow

சென்னை :பொறியியல் படிப்பில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளங்களின் மூலம் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் விண்ணப்பங்களை பெற்றது.

இதில், விளையாட்டு வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1,191 பேரும், மாற்றுத்திறனாளிகள் 237 பேரும் என 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

மேலும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. அவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்சத்து 43 ஆயிரத்து 957 மாணவர்களும், பிற மாநிலத்தை சேர்ந்த 1,088 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 415 பேரும், சிபிஎஸ்இ மாணவர்கள் 18 ஆயிரத்து 208 பேரும், ஐசிஎஸ்இ மாணவர்கள் 688 பேரும், பிற வாரியங்களில் படித்தவர்கள் 734 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் தொழிற்பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் 2,161 பேரும், பொதுப்பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 254 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். விளையாட்டு பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 2 ஆயிரத்து 547 மாணவர்களில் தகுதி உள்ள 1,194 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1,339 பேரில் 1,191 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 237 பேரில் 197 பேருக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

முதன் முறையாக அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 36 ஆயிரத்து 600 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் பள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களில் தகுதியான மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கான தரிவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இதையும் படிங்க : ‘உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - ஸ்டாலின

ABOUT THE AUTHOR

...view details