ETV Bharat / city

‘உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - ஸ்டாலின்

author img

By

Published : Sep 13, 2021, 12:18 PM IST

Updated : Sep 13, 2021, 1:14 PM IST

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா தாக்கல்
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா தாக்கல்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், "நீட் தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.

நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. அதை நிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மாணவர் சேர்க்கையில் 12ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை எனும் முழுமையான சட்ட முன்வடிவை முன்மொழிகிறேன்.

‘நீட்’ தேர்வு குறித்த சட்டமுன்வடிவினை முன்மொழிந்த முதலமைச்சர்
‘நீட்’ தேர்வு குறித்த சட்டமுன்வடிவினை முன்மொழிந்த முதலமைச்சர்

கடந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது.

நீட் தேர்வு குறித்து ஆய்வு

கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா தாக்கல்

சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு நிலைநிறுத்தவும், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மாணவர்களையும் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து 86 ஆயிரத்து 345 நபர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில்  முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்

மதிப்பெண்கள் தேர்வு முறையை கெடுக்காது

அவ்வறிக்கையின்படி, தமிழ்நாடு சட்டம் 3/207 போன்ற சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யலாம் என இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

நீட்டால் வசதி குறைந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை நீட் தேர்வு பூர்த்தி செய்வதாக இல்லை. நீட் தேர்வை கொண்டு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழ்நாட்டில் சமவாய்ப்பை மறுத்து மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லியாக நீட் இருக்கிறது
மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லியாக நீட் இருக்கிறது

பள்ளி தேர்வு மதிப்பெண்கள் எந்த வகையிலும் தேர்வு முறையை கெடுக்காது. கிராம பகுதிகளில் வலுவாக கட்டமைப்பை உறுதி செய்யவும், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுகிறது.

மாணவர் உயிரிழப்பு

உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வில் இருந்து, விலக்களிக்க வேண்டும் என்ற இந்த மசோதாவை அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றி தர வேண்டும்.

கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வால் அனிதா தொடங்கி ஏராளமான மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றுகூட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வினால் உயிரிழந்திருக்கிறார்.

உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான இந்த மசோதாவை உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு - தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்

Last Updated : Sep 13, 2021, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.