தமிழ்நாடு

tamil nadu

அமராவதி ஆற்றில் இருந்து நீர் எடுக்கத்தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

By

Published : May 20, 2022, 3:35 PM IST

அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தனி நபர் ஒருவர் நீர் எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சென்னை: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், 'திருப்பூர் மாவட்டம், மன்னக்கடவு கிராமத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் இருந்து பழனிசாமி என்பவர் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கிறார். அது மட்டுமின்றி, அந்தப் பகுதியில் சில ஆக்கிரமிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும், நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பாதிப்பு ஏற்படுள்ளது. எனவே, இதனைத் தடுக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

இருப்பினும், இதற்கு எந்த வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் எடுக்கப்படவில்லை. எனவே, சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதையும், ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, “இந்த மனு குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கின் மீதான விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:ஜிஎஸ்டி கவுன்சில் மாநில, மத்திய அரசுகளை கட்டுபடுத்தாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details