தமிழ்நாடு

tamil nadu

எம்.ஆர் விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய முடிவு

By

Published : Jul 23, 2021, 2:16 PM IST

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புதுறையினர் முடிவு செய்துள்ளனர்.

எம்.ஆர் விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய முடிவு
எம்.ஆர் விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய முடிவு

சென்னை:முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை 21 ஆம் தேதி விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் ஆகியோர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

டெண்டர் ஊழல்

குறிப்பாக செங்கல்பட்டு முதல் திருச்சி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்களை கண்காணிக்கவும், வேகக்கட்டுப்பாடு கருவிகள், ஒளிப்பட்டைகள் உள்ளிட்டவை பொருத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு விடப்பட்ட டெண்டரை 23 கோடி ரூபாயிலிருந்து 900 கோடி ரூபாய் வரை உயர்த்தி தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு எம்.ஆர் விஜயபாஸ்கர் டெண்டர் விடுத்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு முழுவதும் சோதனை

அதனடிப்படையில் நேற்று (ஜூலை 22) விஜயபாஸ்கர் வீடு, அவரது உறவினர்கள், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், டெண்டர் எடுத்த நிறுவனம் என தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

வங்கி லாக்கர்களில் சோதனை

இந்த நிலையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான வங்கி லாக்கர்களை சோதனை செய்ய சம்மந்தப்பட்ட வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

குறிப்பாக விஜயபாஸ்கர் தனது பெயரிலும், மனைவி பெயரிலும் வங்கி கணக்கு வைத்திருக்கவில்லை, அவர் நடத்தக்கூடிய கம்பெனி பெயரிலேயே வங்கி கணக்கு உள்ளதாக கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில் சம்பள தொகைக்காக மட்டும் வங்கி கணக்கு வைத்திருந்ததும் அந்த கணக்கையும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெண்டர் எடுத்த கம்பெனி உரிமையாளர், நேற்று கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்பு துறையினர் காரை சிறைப்பிடித்த அதிமுக தொண்டர்கள்!

ABOUT THE AUTHOR

...view details