தமிழ்நாடு

tamil nadu

கலவரத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சி - தபெதிக

By

Published : Jun 4, 2022, 4:35 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து சாதி வன்மத்துடன் கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் பேசி வருவதாகக் கூறி, தபெதிகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து ஜாதி வன்மத்துடன் கலவரத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சி - தபெதிகவினர் புகார்!
தொடர்ந்து ஜாதி வன்மத்துடன் கலவரத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சி - தபெதிகவினர் புகார்!

சென்னை:குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த மக்களை இழிவுபடுத்தியதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் குமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் சாதிப் பிரிவினையை உண்டாக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை இழிவுபடுத்தும் நோக்கில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அதேநேரம் பாஜக மத்திய அமைச்சர் எல்.முருகனை பதவியை வைத்தும் பாஜகவில் அவர் வகிக்கும் பொறுப்பை வைத்தும் குறிப்பிடாமல், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி சபையில் பேசுவதே அண்ணாமலையின் சாதி ரீதியிலான வன்மத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

தொடர்ந்து ஜாதி வன்மத்துடன் கலவரத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சி - தபெதிகவினர் புகார்!

ஆகவே அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மட்டுமே குறிப்பிட்டு புகார் அளிக்க நாங்கள் முற்படவில்லை. தொடர்ந்து ஜாதி வன்மத்துடன் கலவரத்தை உண்டுபண்ணும் வகையில் அவர் பேசி வருவதாலேயே அவர் மீது புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் டுவிட்டர் பதிவில் இடம் பெற்றிருந்த சில வார்த்தைகள் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பறையா என்ற வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை... வெடிக்கும் எதிர்ப்பு..

ABOUT THE AUTHOR

...view details