ETV Bharat / state

பறையா என்ற வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை... வெடிக்கும் எதிர்ப்பு..

author img

By

Published : May 31, 2022, 2:54 PM IST

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மோடியை புகழ்ந்து பாராட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பறையா என்ற வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய ட்வீட் செய்துள்ளார்.

மோடியை பாராட்ட அண்ணாமலை பறைய என்ற வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய ட்வீட்
மோடியை பாராட்ட அண்ணாமலை பறைய என்ற வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய ட்வீட்

சென்னை: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று நேற்றுடன் (மே.30) 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், 8 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியை குறிப்பிடும் விதமாக பறையா- என அழைக்கப்படுவதிலிருந்து உலகிற்கே குருவாக இந்தியா உயர்ந்துள்ளது என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "எச்சரிக்கை, பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மோடியை பாராட்ட அண்ணாமலை பறைய என்ற வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய ட்வீட்
மோடியை பாராட்ட அண்ணாமலை பறைய என்ற வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய ட்வீட்

மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "துடியன், பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான் கல்லது சிறந்த குடியும் இல்லை - மாங்குடி மருதனார் புறநானுற்றில் பெருமைப்படுத்தப்பட்ட பறையர்குடியை இழிவு படுத்தும் நோக்கத்தில் கடந்த காலத்தில் #InternationalParaiya என உளறிய சுப்பிரமணியசாமியின் நிலை தான் நாளை ஏற்படும் என கூறியுள்ளார்.

மேலும், பறையா என்பது வரலாற்று அடிப்படையில் தென்னிந்தியாவில் உள்ள தொல்குடி பறையர் சமூகத்தை சேர்ந்தோரை குறிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறையா என்று சொன்னால் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது சட்டம்" என தெரிவித்துள்ளார்.

  • #எச்சரிக்கை
    பாப்பானுக்கே மூப்பான் பறையன்,
    கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி.
    சனாதனத்தை-
    வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான்.
    அப்படிப்பட்ட
    மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும்
    சாதிய மனநோயாளி @annamalai_k மன்னிப்பு கேட்கவேண்டும். https://t.co/uVsBH5D6Ru

    — வன்னி அரசு (@VanniArasu_VCK) May 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே, விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அண்ணா வணக்கம்! கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்!" என்று தெரிவித்துள்ளார்.

  • அண்ணா வணக்கம்!

    கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள்.

    உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும்.

    வாழ்க வளமுடன்! https://t.co/M86yc9ZG7x pic.twitter.com/ge0iSlHJ4M

    — K.Annamalai (@annamalai_k) May 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன் பின், இதற்கு பதிலளித்த வன்னி அரசு, "இதில் பறையா என்பது இழிவுபடுத்த (offensive) பயன்படுத்தப்படும் பெயர் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும், பறையா எனும் சொல் அவமதிக்கும் சொல்லாக தென்னிந்தியாவில் பார்க்கப்படுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி குறிப்பிடுகிறது. நீக்ரோ என்று அமெரிக்காவில் பயன்படுத்தினால் அது அவமதிப்பு" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சர் மன்னிப்புகேட்டால், கச்சத்தீவை மீட்க பிரதமரிடம் பேசி நானே ஏற்பாடு செய்கிறேன்' - அண்ணாமலை அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.