தமிழ்நாடு

tamil nadu

சோஷியல் மீடியாவில் வதந்தி தீயை பரப்பாதீர்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Mar 3, 2020, 8:27 PM IST

சென்னை: சோஷியல் மீடியாவில் வதந்தி தீயை பரப்பிவிடாதீர்கள், நல்ல விஷயங்களை பதிவிடுங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

minister jeyakkumar
minister jeyakkumar

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை, புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்து புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "காங்கிரசுக்கு பிறகு தொடர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஒரே கட்சி ஆளும் அதிமுகதான், வேறு எந்த கட்சியும் கிடையாது. சோஷியல் மீடியா என்பது மருத்துவர் கையில் உள்ள கத்தி போன்றது. உயிரை காப்பாற்றும் விதத்தில் அதனை பயன்படுத்த வேண்டும். அதே போல அதில் நல்ல அறிவுப்பூர்வமான சிந்திக்கக் கூடிய விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்.

ஆனால்,கொலைகாரன் கையில் இருக்கும் கத்தியைப் போல மாறிவிடக்கூடாது. அதுபோல் மாறினால் சமூகம் சீரழிந்துவிடும். சோஷியல் மீடியாவில் வதந்தி தீயை பரப்பி விடாதீர்கள், நல்ல விஷயங்களை பதிவிடுங்கள். ரஜினியை சந்திக்கக் கூடாது என்று 144 தடை போடப்பட்டுள்ளதா? யார் வேண்டுமானாலும் தாராளமாக அவரை சந்திக்கலாம்" என்று கூறினார்.


இதையும் படிங்க:
'கமல் வரலாம்; ரஜினிதான் முதலமைச்சர்' - அர்ஜூன் சம்ப
த்

ABOUT THE AUTHOR

...view details