தமிழ்நாடு

tamil nadu

வரும் 17ஆம் தேதி கூடும் சட்டப்பேரவை... அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை யாருக்கு?; பதில்கூறிய சபாநாயகர்

By

Published : Oct 7, 2022, 6:58 PM IST

வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவைக் கூடும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

அதிமுக எதிர்கட்சி தலைவர் இருக்கை; சட்ட பேரவை மரபு படி முடிவு எடுக்கப்படும் - அப்பாவு
அதிமுக எதிர்கட்சி தலைவர் இருக்கை; சட்ட பேரவை மரபு படி முடிவு எடுக்கப்படும் - அப்பாவு

சென்னை:தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசியவர், 'வருகிற 17ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட இருப்பதாகத் தெரிவித்தார்.

அன்றைய தினம் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அன்றைய தினம் அவை ஒத்தி வைக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்கூடி துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான அதிமுக, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆகிய இருக்கைகள் மாற்றம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கொறாடாக்கள் கொடுத்த கடிதம் தனது ஆய்வில் உள்ளது.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை பொறுத்தவரை அனைவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தான் எனவும்; இரு தரப்புமே முன்னாள் முதலமைச்சர்கள் சட்டப்பேரவையில் கண்ணியமாக செயல்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர், துணைத்தலைவர் இருக்கை மாற்றம் குறித்த கோரிக்கை சட்டப்பேரவை மரபுப்படி முடிவு எடுக்கப்படும் என்றும்; இருக்கை எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவை அன்று தான் தெரிய வரும் எனவும் சூசகமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இருப்பவர் பொம்மை முதலமைச்சர்; மாநில அரசு கும்பகர்ணனைப்போல் தூங்குகிறது - ஈபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details