தமிழ்நாடு

tamil nadu

கருணாநிதியால் முடியாதது உதயநிதியால் முடியுமா? - மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 4:16 PM IST

D Jayakumar: சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி தொடர்பான சனாதன சர்ச்சை திசை திருப்புகின்ற முயற்சி என கடும் விமர்சனம் செய்துள்ளார்.

உதயநிதி சனாதனத்தை கையில் எடுத்திருப்பது திசை திருப்பும் முயற்சி  - ஜெயக்குமார்
உதயநிதி சனாதனத்தை கையில் எடுத்திருப்பது திசை திருப்பும் முயற்சி - ஜெயக்குமார்

உதயநிதி சனாதனத்தை கையில் எடுத்திருப்பது திசை திருப்பும் முயற்சி - ஜெயக்குமார்

சென்னை: அம்பத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் வி.அலெக்ஸாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "திராவிடம் என்று கூறுவார்கள், பிறகு சனாதனம் என்று கூறுவார்கள். இதை இரண்டையும் கூறி ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விரும்பத்தகாத, வெறுக்கத்தக்கதாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இது ஒரு திசை திருப்புகின்ற முயற்சி. தமிழகத்தில் பல பிரச்னைகள் கொழுந்து விட்டு இருக்கிறது. அதனால் இது போன்ற விஷயங்களில் கவனம் திரும்பக் கூடாது. அனைவரையும் திசை திருப்புகின்ற முயற்சியாக சனாதனத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

இப்போது ஒரே நாளில் ஒரே தேர்தல் வருகிறது. இது ஒரு நல்ல விஷயம். 1952ல் 11 கோடி ரூபாய் செலவு செய்து தேர்தல் நடத்தப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் 60,000 கோடி ரூபாய் செலவானது. 60 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே உள்ளது, 11 கோடி ரூபாய் எங்கே உள்ளது. இவை அனைத்தும் யாருடைய பணம், உதயநிதியின் பணமா? அல்லது முதலமைச்சர் ஸ்டாலின் பணமா? மக்களுடைய வரிப்பணம். எதற்கு பயப்படுகிறார்கள். தைரியமாக சொல்ல வேண்டியது தானே.

எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வையுங்கள் மீண்டும் எங்கள் ஆட்சி தான் வரும் என்று உங்களால் சொல்ல முடியுமா? இப்போது நான் சொல்கிறேன். 2024ம் ஆண்டில் அல்ல, நாளைக்கே தேர்தல் வைத்தாலும் மீண்டும் அதிமுகவின் ஆட்சிதான் மலரும். அதை எங்களால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் அதை உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? இப்போது தேர்தல் வைத்தால் திமுக நிரந்தரமாக வீட்டுக்கு போய்விடும்.

ஏற்கனவே திமுகவை எம்.ஜி.ஆர் 13 வருடங்கள் வனவாசம் அனுப்பினார். ஜெயலலிதா 10 வருடங்கள் வனவாசம் அனுப்பினார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை Just Miss. 3 சதவீதத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆட்சி அமைத்தார்கள். எங்களது வீட்டில் யாரும் கை வைக்க முடியாது. எங்களுக்கு இருக்கிற அடிப்படை ஓட்டு, பலமாக இருக்கிறது.

இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுகின்ற அந்தக் கை எந்த காலத்திலும் மாறாது. இப்போது ஏழை, எளியோர், ஆதிதிராவிடர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களது ஓட்டும் நிச்சயமாக இந்த ஆட்சிக்கு எதிராகத் திரும்பி, எங்களுக்கு முழுமையான வகையில் கிடைக்கும். உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார், எங்களது கட்சியை அழித்து விடுவார்களாம்.

அவருடைய பிக் ஃபாதர் (Big Father) கருணாநிதியால் முடியவில்லை, அவருடைய சன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முடியவில்லை, இந்த ஸ்மால் பாயால் (உதயநிதி) முடியுமா? இந்தக் கத்துக்குட்டி மட்டுமல்ல, ஆயிரம் கத்துக்குட்டி வந்தாலும் சரி, ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

72ல் கருணாநிதி எவ்வளவோ குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தார். அதையெல்லாம் தாண்டி பல தியாகங்கள், ரத்தங்களை சிந்தி இன்று 31 வருடம் தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் ஆண்ட கட்சி என்றால் அது அதிமுக தான். கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால், திமுக அத்துடன் இல்லாமல் காணாமல் போயிருக்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு! பெண் கைதான நிலையில் 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details