தமிழ்நாடு

tamil nadu

14 வருடங்களாக நூதன முறையில் திருட்டு; தாம்பரம் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

By

Published : Jul 7, 2023, 5:34 PM IST

சென்னையில் தொடர்ந்து 14 வருடங்களாக 6 கோடி ரூபாய் வரை நூதன முறையில் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி வந்த நபரை தாம்பரம் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மேற்கு தாம்பரம் முடிச்சூர் பிரதான சாலையில் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் பிரபல தனியார் ஷோரூம் இயங்கி வருகிறது. இங்கு ஊழியராக சுரேஷ்பாபு (53) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் ஷோரூமில் பணியில் இருந்த போது வெங்கடபதி (57) என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடையின் உரிமையாளர் தனக்கு நன்றாக தெரிந்தவர் எனக் கூறி எனக்கு 12 லட்சம் ரூபாய் வரை வீட்டு உபயோக பொருள்கள் வேண்டும் என ஆர்டர் செய்து விட்டு தனது வீட்டில் பொருட்களை இறக்கி வைத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

உடனே சுரேஷ்பாபு 12 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டு உபயோக பொருள்களை வெங்கடபதி கொடுத்த, மகாலட்சுமி நகர் கூடுவாஞ்சேரி என்ற முகவரியில் பொருட்களை டெலிவரி செய்துள்ளனர். பொருள்களை டெலிவரி செய்த பிறகு தன்னிடம் பணம் இல்லை காசோலையை தருகிறேன் நீங்கள் வங்கியில் கொடுத்து 12 லட்சம் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். பின்னர், பொருள்களை இறக்கி வைத்த ஊழியர்கள் அந்த காசோலையை பெற்றுக்கொண்டு நேராக சுரேஷ் பாபுவிடம் கொடுத்துவிட்டனர்.

அதன் பின்னர் கடந்த ஜூன் 04ஆம் தேதியன்று சுரேஷ்பாபு காசோலையை வங்கியில் மாற்ற முயன்ற போது காசோலையில் பணம் எதுவும் இல்லை என வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு பதறிப்போன சுரேஷ் பாபு உடனே
பொருள்களை டெலிவரி செய்த முகவரிக்குச் சென்று பார்த்துள்ளார். அவர் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் என தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் சுரேஷ் பாபு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஷகிலா உள்பட ஐந்து பேர் கொண்ட தனிப்படையினர் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது ஈரோடு பெரிய கடையம் பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடபதி என்பது தெரியவந்தது. அதன் பிறகு உடனே சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு விரைந்த தனிப்படை காவல் துறையினர், அங்கு மூன்று நாள்கள் பதுங்கி இருந்து வெங்கடபதியை கைது செய்து தாம்பரம் காவல் நிலையம் அழத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த 14 வருடங்களாக கோயம்புத்தூர், ஈரோடு அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து பத்து நாட்கள் தங்கி, அதன் பிறகு பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூமுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, ‘உங்கள் முதலாளி எனக்கு நன்றாக தெரிந்தவர்’ எனக்கூறி வீட்டு உபயோக பொருள்களை வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது வரையில் ஆறு கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஈரோட்டில் இருந்து சென்னைக்குச் செல்லும்போது ஊரப்பாக்கம் என்ற பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அந்த நண்பர், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருகிறார். அவரின் வீட்டிற்குச் சென்று, புதிய வீட்டு உபயோகப் பொருள்களை கொடுத்துவிட்டு அங்கு இருக்கும் பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

அப்பொழுது தான் அவருக்கு ஒரு யோசனை வந்துள்ளதாம், அதன்படி தாம்பரத்தில் உள்ள சத்யா ஷோரூமில் பொருள்களை வாங்கி மோசடி செய்யலாம் என திட்டம் தீட்டியிருக்கிறார். கூடுவாஞ்சேரி பகுதியில் 75 ஆயிரம் ரூபாய் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து வீடு எடுத்து அங்கு பத்து நாட்கள் தங்கி இருந்து மோசடியை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, வெங்கடபதிக்கு உடைந்தையாக இருந்த வைகை நகர் ஊரபாக்கம் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்த சரவணன் (38) என்பவரையும் கைது செய்தனர்.

அதன் பிறகு 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள்களையும் மற்றும் பொருள்களை விற்று கையில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பொது இடங்களில் பெண்கள் உஷார்.. ஆபாசமாக போட்டோ எடுத்து ஆன்லைனில் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details