ETV Bharat / state

பொது இடங்களில் பெண்கள் உஷார்.. ஆபாசமாக போட்டோ எடுத்து ஆன்லைனில் விற்பனை!

author img

By

Published : Jul 6, 2023, 6:27 PM IST

பொது இடங்களில் பெண்களை குறி வைத்து ஆபாசமாக போட்டோ எடுத்து வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்து வரும் கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: நடிகைகள் மற்றும் பெண்கள் ஆகியோரின் ஆபாச புகைப்படங்கள் ,வீடியோக்கள் பல்வேறு இணையதள முகவரிகளில் கட்டுப்படுத்த முடியாமல் பரவிக் கிடக்கின்றது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும் சமூக வலைத்தளம் மற்றும் செயலிகள் மூலமாக செல்போன்களின் பொதுமக்கள் தடையில்லாமல் பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சியில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவி கிடக்கின்றன.

இந்த சமூக வலைதளங்கள், செயலிகள் மூலமாக பல சைபர் கிரைம் கும்பல்கள் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ய பல்வேறு நூதன வழிகளை கையாண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது பொது இடங்களுக்கு செல்லும் பெண்களை குறி வைத்து நூதன முறையில் பணம் சம்பாதிக்கும் சைபர் கும்பல் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கத்தின் மூலமாக பெண்களின் ஆபாச புகைப்படங்களை விற்பனை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வலைத்தளங்களில் ஆபாச புகைப்படங்கள் சினிமா நடிகைகள் மற்றும் ஆபாச நடிகைகள் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவிக் கிடக்கும். ஆனால், இந்த சைபர் கிரைம் கும்பல்கள் பொது இடங்களில் பெண்கள் செல்லும் போது அவர்களை ஆபாசமாக மறைந்திருந்து புகைப்படங்கள் எடுத்து அதனை விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஷாப்பிங் மால்கள், கடைவீதிகள், ரயில் நிலையங்கள் பொழுதுபோக்கும் இடங்கள் ஆகியவற்றில் பெண்கள் செல்லும் போது, அவர்களுக்கே தெரியாமல் ஆடைகள் விலகும் போதும் , பெண்கள் அசைவுகளை ஆபாசமாக வீடியோ பதிவு எடுத்தும் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கங்களில் இதற்கென தனியாக குழுக்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.

அதில், இதுபோன்று பெண்களின் ஆபாச போட்டோக்கள் விரும்புபவர்கள் குழுக்களில் இணையலாம் என ஆன்லைனில் விளம்பரப்படுத்துகின்றனர். அவ்வாறு அந்தக் குழுக்களில் இணைந்த பிறகு ஜிபே, போன்-பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாக ஒரு போட்டோவிற்கு 50 ரூபாய் என்ற அடிப்படையிலும், 20 போட்டோக்கள், 50 போட்டோக்கள், 100 போட்டோக்கள் என பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக எடுத்த போட்டோக்களை சைபர் கிரைம் கும்பல் விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் போட்டோக்களில் உள்ள பெண்களுக்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக தங்களின் புகைப்படங்கள் பகிரப்படுவது தெரியவந்து அதிர்ச்சி அடைகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குறிப்பாக டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்ற குழுக்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு பெண்களின் ஆபாச போட்டோக்கள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்களின் புகார்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டெலிகிராம் குழுக்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு அதில் பணப்பரிவர்த்தனை செயலி மூலமாக பணம் யாருக்கு சென்றடைகிறது என்பதை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறிப்பாக ஆபாச போட்டோக்களை வாங்க அனுப்பப்படும் பணம் எந்த வங்கிக் கணக்கிற்கு செல்கிறது எந்த இடத்தில் இருந்து இந்த டெலிகிராம் குழுக்களை இயக்குகிறார்கள் என்பதை போலீசார் தேடி வருகின்றனர். அவ்வாறு விசாரணை நடத்தியதில் பொது இடங்களில் பெண்களுக்கே தெரியாமல் ஆபாசமாக எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் telegram குழுவில் விற்பனை செய்யப்படுவதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறாக பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக போட்டோக்கள் வீடியோக்கள் எடுக்கும் கும்பல் யார் என்பது குறித்தும் இந்த telegram குரூப்பின் அட்மின் மற்றும் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.

இதையும் படிங்க: திருட்டு செல்போன்களை விற்க வந்த திருடன்.. சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.