தமிழ்நாடு

tamil nadu

உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் ஏசி வெடித்து விபத்து!

By

Published : Feb 8, 2021, 2:07 PM IST

Updated : Feb 8, 2021, 2:28 PM IST

சென்னை: கீழ்பாக்கம் அருகே உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிபவரது வீட்டின் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் ஏசி வெடித்து விபத்து
உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் ஏசி வெடித்து விபத்து

சென்னை கீழ்பாக்கம் பர்னபி சாலையைச் சேர்ந்தவர் முத்துராஜா (52). இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறார். நேற்றிரவு 10 மணியளவில் முத்துராஜா தனது வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஏசி அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென பலத்த சத்தத்துடன் ஏசி வெடித்துச் சிதறியது. இதனைக் கண்டு அலறியடித்து முத்துராஜா வெளியில் ஓடிவந்தார். பின்னர், உடனடியாக கீழ்ப்பாக்கம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் ஏசியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவின் காரணமாக ஏசி வெடித்து இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டையில் தீ விபத்து - மூன்று கூரை வீடுகள் தீயில் கருகி நாசம்!

Last Updated :Feb 8, 2021, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details