தமிழ்நாடு

tamil nadu

பெண் தோழியுடன் விடுதியில் உல்லாசம்.. ஆண் நண்பர் மரணத்தில் திடீர் திருப்பம்!

By

Published : Mar 10, 2023, 7:05 AM IST

Updated : Mar 10, 2023, 10:02 AM IST

சென்னை பெரியமேடு விடுதியில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆண் நண்பர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், திடீர் திருப்பமாக திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தள்ளிவிட்டு கொலை செய்ததாக பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை செய்த பிரியாவின் புகைப்படம்
கொலை செய்த பிரியாவின் புகைப்படம்

சென்னை:பெரம்பூர் நாராயண மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ்(41). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரகாஷிற்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் புதன்கிழமை காலை பிரகாஷ் தனது பெண் தோழி ஒருவருடன் பெரியமேட்டில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரவு பிரகாஷுடன் வந்த பெண் தோழி, விடுதி மேலாளரிடம் சென்று தன்னுடன் வந்த நபர் இறந்துவிட்டதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விடுதி மேலாளர் உடனே இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த பிரகாஷின் உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் பிரகாஷ் உடன் வந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் பிரியா(42) என்பதும், கொசப்பேட்டையில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் பிரியாவுக்குத் திருமணமாகி இரு மகன்கள் உள்ளதும், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பிரியா தனியாக வாழ்ந்து வருவது தெரியவந்தது.

இந்நிலையில் பிரியா 5 வருடங்களுக்கு முன்பு ஓட்டேரியில் உள்ள அப்பளம் கம்பெனியில் வேலை பார்த்த போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த பிரகாஷுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். பின்னர் இருவரும் தொடர்பை துண்டித்து கொண்ட நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மீண்டும் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்து, நேற்று பெரியமேட்டில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் பிரகாஷ் திடீரென உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என சென்றதாகவும், பிரகாஷ் மட்டும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரியா விசாரணையில் தெரிவித்துள்ளார். பிரியாவின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பிரியாவிடம் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பிரகாஷின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தலையில் ஏற்பட்ட உள்காயத்தின் காரணமாக மரணம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புகார் அளித்த பிரியாவிடம் விசாரணை நடத்தியதில் பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், அப்போது மது போதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், கையால் இருவரும் தாக்கி கொள்ளும் போது தள்ளிவிட்டதாகவும், அதில் பிரகாஷ் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதனையடுத்து பெரியமேடு போலீசார் பிரியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். முறையற்ற வாழ்க்கையில் தனியார் விடுதியில் உல்லாசமாக இருந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஆண் நண்பரைக் கொன்றுவிட்டு பெண் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை நில அளவையர் கைது!

Last Updated : Mar 10, 2023, 10:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details