தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சிறுநீரக பாதிப்பு: சென்னை மருத்துவக் கல்லூரி ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

By

Published : Mar 9, 2023, 8:09 PM IST

அறியப்படாத சிறுநீரக பாதிப்பு அல்லது நாள்பட்ட பாதிப்பு அதிகளவில் தமிழ்நாட்டில் இருப்பதையும், உயர் ரத்த அழுத்தம், நீரிழீவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய் அதிகரித்து வருகிறது என சென்னை மருத்துவக்கல்லூரியின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை மருத்துவக்கல்லூரியில் சிறுநீரக சிகிச்சைக்கான சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருந்து நோய் தொற்று முற்றிய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரக இயல் துறை மற்றும் சமூக மருத்துவத்துறையினர் இணைந்து தமிழ்நாடு சிறுநீரக செயலிழப்பு அளவீடு குறித்து கள ஆராய்ச்சி செய்தனர்.

அதன் முடிவு அறிக்கையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில், "தமிழ்நாட்டில் சிறுநீரகச் செயலிழப்பு நோய்த்தாக்க கள ஆராய்ச்சி சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரக இயல் துறை மற்றும் சமூக மருத்துவத் துறையினரால் இணைந்து கடந்த 2022ஆம் ஆண்டு உலக சிறுநீரக தினத்தன்று ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஒராண்டாக நடைபெற்றது. அதில் பொது சுகாதார இயக்குநரகத்தைச் சார்ந்த மருத்துவர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் பணியாற்றினர்.

இதையும் படிங்க :ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம்: மாநில அரசை கட்டுப்படுத்துகிறதா மத்திய அரசு?

இந்த ஆராய்ச்சியில் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் தான் சிறுநீரக செயலிழப்பிற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் 2,756 பெண்கள், 1,926 ஆண்கள் என சுமார் 4 ஆயிரத்து 682 பேர் கணக்கிடப்பட்டனர். திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள், விதவைகள் எனவும் தனித் தனியாகப் பிரித்து தரவுகளை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சிறுநீரக பாதிப்பு

நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் படிப்பறிவு இல்லாதவர்கள், தொடக்க நிலைக் கல்வி பெற்றவர்கள், உயர்நிலைக் கல்வி பெற்றவர்கள், மேல்நிலைப் பள்ளி முடித்தவர்கள், பட்டம், பட்டயம் பெற்றவர்கள் என தனித் தனியாக பிரித்தும் கணக்கிடு செய்யப்பட்டு உள்ளது. சிறுநீரக நோய் தொற்று நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அதிகளவில் வருகிறது.

நோய் தொற்று இருப்பது தெரியாமல் இன்னும் பலர் உள்ளனர். சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களில் 22.4 சதவீதம் பேருக்கும், நீரிழிவு நோய் மட்டும் உள்ளவர்களில் 9.6 சதவீதம் பேருக்கும், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு 11.8 சதவீதம் பேருக்கும் வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிறுநீரக பாதிப்பு: சென்னை மருத்துவக்கல்லூரி ஆய்வில் கண்டுபிடிப்பு

மேலும் CKDU அல்லது அறியப்படாத காரணங்களால் ஏற்படும் நாள்பட்ட சிறுநீரக நோயாகும். இந்த நோய் முக்கியமாக உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள விளிம்பு நிலை விவசாய மக்களை முக்கியமாக பாதிக்கிறது என கூறப்படுகிறது. இந்த நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் 53.4 சதவீதம் பேருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே மரபு சார பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிறுநீரக பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஆளுநரை அவதூறாக பேசுவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்": அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details