தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் புதிய சிக்கல்? அமலாக்கத்துறை தீவிர ஆலோசனை!

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வழக்குகளில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 18, 2023, 5:12 PM IST

Updated : Jun 18, 2023, 7:31 PM IST

சென்னை:சட்ட விரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அவரின் அலுவலகத்திலும் அதிரடியாக பல முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியது.

இதனடிப்படையில், அவரை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவருக்கு திடீரென ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தரும் நிலையில் இல்லை என மருத்துவர்கள் கூறியிருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை:கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை எட்டு நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த தீவிரம் காட்டி வருகிறது அமலாக்கத்துறை. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியப் பின்பும், அவரிடம் விசாரணை நடத்த முடியாத சூழ்நிலை அமலாக்கத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, 'அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தரும் நிலையில் இல்லை' என மருத்துவர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அமலாக்கத்துறை அவரிடம் தனது விசாரணையை தொடங்க முடியாத நிலையில் உள்ளது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை முதல்வருக்கு வைத்த செக் மேட் - திருமாவளவன்

வழக்கறிஞர்களுடன் அமலாக்கத்துறை தீவிர ஆலோசனை:இதனால், கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியிடம் முதற்கட்ட விசாரணையை நடத்த மும்முரமாக இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் உரிய விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் முறையிட்டு, காவலில் எடுக்கப்பட்ட நாட்களை நீட்டிக்கலாமா? என்று வழக்கறிஞர்களுடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதில் நம்பிக்கை இல்லையெனவும் ஆகவே, எய்ம்ஸ் மற்றும் இஎஸ்ஐ உள்ளிட்ட மத்திய அரசு சார்ந்த மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை சிகிச்சையளிப்பதற்காக அனுமதிக்க வேண்டும் என்று கூறிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அதற்கான முயற்சிகளையும் எடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவர்களை இது அவமதிக்கும் செயல் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த ஆயத்தம்!

Last Updated : Jun 18, 2023, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details