தமிழ்நாடு

tamil nadu

சாலையின் தடுப்புச்சுவரில் மோதிய கல்லூரிப்பேருந்து - 20க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு காயம்

By

Published : Jan 9, 2023, 4:42 PM IST

குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Etv Bharatசாலையின் தடுப்பு சுவரில் மோதிய கல்லூரி பேருந்து -20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயம்
Etv Bharatசாலையின் தடுப்பு சுவரில் மோதிய கல்லூரி பேருந்து -20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயம்

சென்னை:ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று(ஜன.9) காலை வழக்கம்போல் இக்கல்லூரியின் பேருந்து நந்தம்பாக்கத்தில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் மோகன்ராம் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். பேருந்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தனர்.

இந்நிலையில் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், சிறுகளத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் தடுப்புச்சுவரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மோதியதில் பஸ்ஸின் முன் பகுதி நொறுங்கியது. இதில் பேருந்தில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்துக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டதில் காயங்கள் ஏற்பட்டன. மேலும் தடுப்பு சுவரில் வேகமாக மோதியதில் பேருந்தில் பாதி பகுதி தடுப்பு சுவருக்குள் சென்றது. இதில் டிரைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக காயம் அடைந்தவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்ஸை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. குன்றத்தூர் போலீசார் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் அதிக வேகமாக கல்லூரிப்பேருந்து இயக்கியதே இந்த விபத்திற்கு காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Video: வளர்ப்புப் பூனையை கவ்விச் செல்லும் 2 சிறுத்தைகள்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details