தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 689 பேருக்கு கரோனா பாதிப்பு!

By

Published : Jun 17, 2021, 3:39 PM IST

சென்னை: கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று (ஜூன் 16 ) 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சி அறிவிப்பு
மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று (ஜூன் 16 ) மட்டும் கரோனா தொற்றால் 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்றுப் பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இதுவரையிலும் 5 லட்சத்து 27 ஆயிரத்து 283 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 5 லட்சத்து 12 ஆயிரத்து 832 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 6 ஆயிரத்து 531 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட 7ஆயிரத்து 920 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மண்டல வாரியான பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது;

மண்டலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தவர்கள்
அண்ணா நகர் 55,191 53,604
கோடம்பாக்கம் 52,148 50,588
தேனாம்பேட்டை 49,332 47,798
ராயபுரம் 37,514 36,383
அடையாறு 44,168 42,885
திரு.வி.க. நகர் 40,968 39,623
தண்டையார்பேட்டை 34,980 33,850
அம்பத்தூர் 42,421 41,448
வளசரவாக்கம் 35,232 34,517
ஆலந்தூர் 24,322 23,747
பெருங்குடி 25,123 24,580
திருவொற்றியூர் 14,769 14,354
மாதவரம் 19,913 19,484
சோழிங்கநல்லூர் 16,107 15,805
மணலி 7,846 7,629


இதையும் படிங்க: கவச உடை அணிந்து கரோனா நோயாளிகளை சந்தித்த ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details