தமிழ்நாடு

tamil nadu

தீவிர வேட்டையில் சிக்கிய 400 கிலோ குட்கா

By

Published : Aug 27, 2019, 10:51 PM IST

சென்னை: கோட்டூர்புரத்தில் தடை செய்யப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Gutka seized

சென்னை கோட்டூர்புரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறை உதவி ஆணையாளர் சுதர்சன் தலைமையில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ குட்காவுடன் உரிமையாளர் திருப்பதிராஜா

அப்போது, திருப்பதி ராஜா என்பவருக்குச் சொந்தமான குடோனில் 400 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் திருப்பதிராஜாவை கைது செய்து, 400 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்தனர். மேலும், கோட்டூர்புரம் பகுதியில் உள்ள வேறு கடை, குடோன்களில் தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details